Type Here to Get Search Results !

நாம் அதிகமாக பயன்படுத்தும் இந்த பொருள் இரத்த அழுத்தத்தை குறைத்து நமது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்..!!!!!திரிபலா நீண்ட காலமாக பண்டைய ஆயுர்வேத கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கும் ஒரு மருந்து ஆகும். எண்ணற்ற சுகாதார பிரச்சினைகள் பட்டியலிலிருந்து நிவாரணம் வழங்க இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அமலாக்கி (எம்பிலிகா அஃபிசினாலிஸ்), பிபிதாக்கி (டெர்மினியா பெல்லிரிகா), மற்றும் ஹரிடாக்கி (டெர்மினியா செபுலா) ஆகிய மூன்று பழங்களின் கலவையுடன் திரிபலா தயாரிக்கப்படுகிறது.

இது பல உடல் நலப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இருப்பினும், பரிந்துரைக்கப்பட்ட திரிபலாவை விட அதிகமாக எடுத்துக்கொள்வது பலவிதமான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும். இக்கட்டுரையில் திரிபலாவல் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் :திரிபலா ஒரு லேசான மலமிளக்கியாகும். மேலும் வாயு, வயிற்றுப்போக்கு, பிடிப்புகள், வயிற்று வலி மற்றும் பல இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும். நீங்கள் எந்த வகையான திரிபலாவை உட்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானவை வரை இருக்கும். இந்த சிக்கல்களை நீங்கள் கவனித்தால், உங்கள் அளவைக் குறைப்பது அல்லது சில நாட்களுக்கு திரிபலாவை எடுத்துக்கொள்வதை நிறுத்துவது நல்லது.

கர்ப்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் :திரிபலாவின் பொருட்களில் ஒன்றான ஹரிடாக்கி, கர்ப்பிணிப் பெண்களில் கருக்கலைப்புக்கு காரணமாக கருதப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களை பொறுத்தவரை, பல தீங்கு விளைவிக்கும் விளைவுகளுடன் தொடர்புடையது. இருப்பினும், திரிபலாவிற்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதன் தாக்கத்திற்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வதற்கு இன்னும் அதிகமான ஆய்வு தேவைப்படுகிறது.

மருந்துகளுடன் வினைபுரியக்கூடும் :சைட்டோக்ரோம் பி 450 எனப்படும் முக்கியமான கல்லீரல் நொதியின் சரியான செயல்பாட்டில் திரிபலா சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இது மருந்துகளை சரியாக வளர்சிதைமாக்குவதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது மற்றும் திரிபாலா நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையான மருந்துகளுடன் செயல்படக்கூடும். இது அலோபதி மருந்துகளுக்கு மட்டுமல்ல. தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், திரிபலாவின் ஒரு கூறு மனச்சோர்வு மருந்துடன் தொடர்புகொண்டு, தூக்க முறை, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றின் இடையூறுடன் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்திருக்கிறது.

இரத்த அழுத்தத்தை அதிகமாகக் குறைக்கலாம் :திரிபலா நீரிழிவு நோய் எதிர்ப்பு குணங்களுக்கு பிரபலமானது. இருப்பினும், ஏற்கனவே நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் அதிகப்படியான திரிபலாவை உட்கொண்டால், அவர்களின் இரத்த அழுத்தம் ஆபத்தான குறைந்த அளவிற்கு குறையும். திரிபலாவில் உள்ள சர்பிடால் மற்றும் மெந்தோலின் அளவு இந்த விளைவுக்கு முக்கிய காரணங்கள். ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் திரிபலா சாப்பிடுவதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மனித உடலில் திரிபலாவின் நீண்டகால விளைவை மையமாகக் கொண்ட கூடுதல் ஆய்வுகள் அதன் விளைவுகளை நன்கு புரிந்து கொள்ள உதவும்.

எவ்வாறு பயன்படுத்துவது? 

திரிபலாவின் சரியான அளவைப் பற்றி போதுமான அறிவியல் தகவல்களோ அல்லது ஆய்வுகளோ இல்லை. ஆனால் சில ஆதாரங்கள் ஒரு நபர் 500 மி.கி முதல் 1 கிராம் வரை மட்டுமே திரிபலாவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன. திரிபாலா பல ஆரோக்கிய பிரச்சனைகளை குறைத்துக்கொண்டிருந்தாலும், அதை அதிகமாக சாப்பிடுவது பல சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியது :

கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும்போது திரிபலாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களிடம் ஏதேனும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், திரிபாலாவை உட்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம். எந்தவொரு மூலிகை சப்ளிமெண்ட்டை சாப்பிடுவதற்கு முன்பு அதன் தரத்தை சரிபார்ப்பது முக்கியம்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad