தனுஷ் பட ஹீரோயினுடன் ஜோடியாகும் விஜய் சேதுபதி ?!!!!!!விஜய் சேதுபதி தன் கைவசம் அதிக எண்ணிக்கையிலான படங்களை வைத்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் படம் இன்னும் துவங்காமல் தான் இருக்கிறது. அதிலிருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டார், ட்ராப் ஆகி விட்டது என அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது டிராப் ஆகவில்லை விரைவில் துவங்கும் என படக்குழு விளக்கம் தெரிவித்து வருகிறது.இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முத்தையா வாழ்க்கை வரலாற்று படத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஒப்பந்தமாகி உள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. ரஜிஷா விஜயன் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கர்ணன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் இணைவது உறுதி ஆனால் அது அவரது இரண்டாவது தமிழ் படமாக இருக்கும்.

ரஜிஷா விஜயன் கேரளாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். Anuraga Karikkin Vellam என்ற படத்தின் மூலமாக அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்காக அவருக்கு அதிக விருதுகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் பல்வேறு படங்களில் பணியாற்றிய அவர், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தின் மூலமாக களமிறங்கியிருக்கிறார். அந்த படம் இறுதிகட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில் தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி அவரை அணுகியுள்ளார்.இந்த படம் பற்றி விஜய் சேதுபதி இதற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் கெரியரை விட சொந்த வாழ்க்கை பற்றி தான் அந்த படத்தில் அதிகம் பேசப்படும் என குறிப்பிட்டிருக்கிறார். இதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் பௌலிங் நுட்பங்களை முத்தையா முரளிதரனே சொல்லித் தர உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

முத்தையா முரளிதரன் பற்றி ஒரு பேட்டியில் பேசி இருந்த விஜய் சேதுபதி, நான் அவருடைய வாழ்க்கையில் நடந்த கதையை கேட்டேன் அது நல்ல கதை தான், அடுத்தவர்களுக்கும் சொல்லப்பட வேண்டிய ஒன்று என கூறியிருந்தார்.

விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் ரோலில் நடிக்கிறார் என செய்தி வெளியான பிறகு சில தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அது பற்றி விஜய் சேதுபதி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. "ஒரு பிரபலமாக இருக்கும் நபர் ஒரு விஷயத்தை பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த தலைப்பை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும், மேலும் நீங்கள் பேசுவது யாரையும் பாதிக்கவும் கூடாது. அதே நேரத்தில் உங்களது கருத்தையும் பதிவு செய்ய வேண்டும். தற்போது எழுந்துள்ள கேள்விகள் இந்த படம் வெளிவந்த பிறகு காணாமல் போய்விடும்" என விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

ரஜிஷா விஜயன் கைவசம் இரண்டு மலையாளப் படங்கள் இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது. ஆனால் விஜய் சேதுபதி தன் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று விஜய்யின் மாஸ்டர் படம். விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post