Type Here to Get Search Results !

ஏன் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை செய்யப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?



பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையானது, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும். அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையானது 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோயிலின் அஸ்திவார கல்லை நடுவார்.

மேற்படி தகவல்களின்படி, அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தட்டுகளை அடித்து ஓசை எழுப்பி ராமரை வரவேற்பதோடு, ராமர் பிறந்த இடமானதால், அங்கு அவரை வரவேற்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளிலும் கோயிலிலும் விளக்குகளை ஏற்றி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக மக்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர் என்பதை நம்மால் எளிதாக உணர முடிகிறது. பூமி பூஜை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

பூமி பூஜை என்றால் என்ன? 



பூமி பூஜை என்பது நிலத்தில் கட்டுமானம் அல்லது விவசாயப் பணிகளை தொடங்குவதற்கு முன்பு, செய்யப்படும் சடங்காகும். பூமி மற்றும் மண்ணின் தெய்வமான வஸ்து பகவான் மற்றும் திசையின் தெய்வத்தை வணங்குவதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது. பூமி பூஜை செய்வதன் நோக்கம் என்னவென்றால், வேளாண்மை அல்லது கட்டுமானப் பணிகள் செய்யப்பட வேண்டிய நிலத்திலிருந்து அனைத்து வாஸ்து தோஷங்கள் மற்றும் தீய சக்திகளை அழிப்பதே ஆகும். பூஜையானது, நிலத்தின் உரிமையாளரால் செய்யப்படும். அந்த நிலத்தில் வசிக்கும் உயிரினங்களை அகற்றுவதற்காக, பூமாதேவி மற்றும் இயற்கை அன்னையிடம் மன்னிப்பு கோருவதற்காகவும் இந்த பூஜையானது செய்யப்படுகிறது.

பூஜை செய்யும் இடம் :

பூமி பூஜையானது, கட்டுமான மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலத்தின் வடகிழக்கு திசையில் செய்யப்படுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு நிலம் அல்லது கட்டிடத்தின் வடகிழக்கு பகுதி மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. எனவே, தான் அனைத்து பூமி பூஜைகளும் ஒரே திசையில் நிகழ்த்தப்படுகிறது. பூஜை சடங்குகள் முடிவடைந்ததும், அதே திசையில் தான் நிலமானது முதலில் தோண்டப்படும். இது மட்டுமல்ல, எந்த கட்டிடத்தின் வடகிழக்கு சுவரும் மற்ற சுவர்களை விட சற்று உயரம் குறைவாக தான் இருக்க வேண்டும். அப்போது தான் காலை வெளிச்சம் மற்றும் சூரிய கதிர்கள் வீட்டிற்குள் நுழையும். அதற்காக தான் இப்படி வடிவமைக்கப்படுகிறது.

பூஜையை யார் செய்வார்கள்? 

பூமி பூஜையை, வழக்கமாக வீட்டின் தலைவர் அல்லது நிலத்தின் உரிமையாளரால் தான் செய்ய வேண்டும். நிலத்தின் உரிமையாளர் திருமணமாகாதவர் என்றால், குடும்பத் தலைவர் பூஜையில் அமர்வார். வழக்கமாக ஒரு திருமணமான தம்பதியினர், நன்கு கற்றறிந்த மற்றும் அனுபவம் வாய்ந்த குருக்களின் உதவியுடன் பூஜையானது செய்யப்படும்.

பூமி பூஜையின் சடங்குகள் :

* முதலில், பூஜை நிகழவிருக்கும் தளமானது சுத்தம் செய்யப்பட்டு, சீர்படுத்தப்படும்.

* பூஜையில் அமருபவர்கள், புத்தாடைகள் அணிந்து பூஜையில் பங்கேற்ற வேண்டும். புதிய ஆடைகளை வாங்க முடியாவிட்டால், சுத்தமான ஆடைகளை அணியலாம்.

* பூஜையில் அமரும் போது கிழக்கு திசையை பார்த்து அமர வேண்டியது அவசியம்.

* ஒரு சுத்தமான மேடையில், தெய்வங்களை (பூமாதேவி, வாஸ்து பகவான், பஞ்ச பூதங்கள் மற்றும் விநாயகர்) வைக்க வேண்டும்.

* பூஜையின் தொடக்கமாக,முதலில் முழு முதற்கடவுள் விநாயகரை வணங்க வேண்டும்.

* அதன் பிறகு, நிலத்தை நேர்மறையான வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக தீர்மானம் என்று அழைக்கப்படும் சங்கல்பத்தை ஏற்க வேண்டும்.

* சங்கல்பத்துடன், பிரண் பிரதிஷ்டா, ஷட்கர்மா மற்றும் மங்லிக் திராவ்ய ஸ்தபனா ஆகியவையும் நிகழ்த்தப்படுகின்றன.

* ஒரு சிவப்பு துணியில் கட்டப்பட்ட ஒரு தேங்காய் தரையில் வைக்கப்படுகிறது. சடங்கின் ஒரு பகுதியாக ஹோமம் நிகழ்த்தப்படும்.

பூமி பூஜையின் நன்மைகள் :

* பூமி பூஜை நிகழ்த்தப்படும் நிலத்திலிருந்து அனைத்து தீமைகளும் அகன்று, எல்லா வகையான எதிர்மறையிலிருந்தும் விடுபடுவதை உறுதி செய்வதற்காகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.

* பூமி பூஜையானது எந்த இடையூறும் இல்லாமல் கட்டுமான பணிகளை சீராக முடிக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

* பூமி பூஜை நிகழ்த்தப்படும் நிலத்தில் வசிப்பர்கள் அல்லது அங்கு செய்யப்படும் எல்லா காரியங்களும் சிறந்த முறையில் நடைபெற்று, நல்வாழ்வுடன், செல்வ செழிப்போடு வாழ்ந்திடுவதற்காகவும் இந்த பூஜையானது நிகழ்த்தப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad