சென்னையில் டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சென்னையில் டாஸ்மாக் திறக்க அனுமதி இல்லை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லை வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைககள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் இரணியம்மன்மேடு வரை சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url