Type Here to Get Search Results !

தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்: பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் - தமிழக அரசு


தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கட்டுள்ளது. ஊரடங்கு  காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறக்கப்படும் எனவும் மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது.6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பாதிப்பு குறைவான பகுதியான பச்சை மண்டல மாவட்டங்களில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் சில தளர்வுகளை மாநில அரசு சில சலுகைகளை அறிவித்தாலும், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை.

40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், மதுவுக்கு அடிமையான மக்கள், போதைக்காக சேவிங் லோஷன் உள்பட பல்வேறு கெமிக்கல்களை குடித்து உயிரிழந்த சம்பவங்களும் தமிழகத்தில் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு எல்லைப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது.

பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்

* மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.

* ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக இருக்கவேண்டும்.

* மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5  நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது.

* ஏற்கனவே பகல் 12 முதல் இரவு 10 மணி வரை இருந்த நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி.

* அனைத்து மதுக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

* மதுக்கடையில் கூட்டத்தை தவிர்க்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி இல்லை, கடைகளுக்கு மட்டுமே அனுமதி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad