Type Here to Get Search Results !

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51.89 லட்சத்தை நெருங்கியது; ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா?

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51.89 லட்சத்தை நெருங்கியது
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பிடியில் அமெரிக்க வல்லரசு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அந்த நாடு தொடர்ந்து கொரோனாவின் பிடியில்தான் இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 334,072 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 5,189,178 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,078,557 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,635 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112,359 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,435 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 45,300 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 96,295 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,620,457 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 32,486 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228,006 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,940 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 280,117 ஆக அதிகரித்துள்ளது.

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,099 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 317,554 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,215 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 181,826 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 36,042 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250,908 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,249 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129,341 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,186 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,235 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179,021 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,775 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,700 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,634 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,967 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 4,249 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,898 பேரும், பிரேசில் நாட்டில் 20,047 பேரும், சுவீடன் நாட்டில் 3,871 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,152 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,583 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,090 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,277 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? 
இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது.

அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது என இந்தியா 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது.

இந்த ஒப்பந்தம் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலானது.

ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை இந்தியா வாங்குவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. தங்களிடம் இருந்துதான் இத்தகைய தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்கா எண்ணுகிறது. எனவே, ரஷியாவிடம் இருந்து நீங்கள் ஏவுகணை வாங்கினால், பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது. ஆனாலும் இந்தியா அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.

இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷியாவுக்கு இந்தியா முதல் கட்டமாக 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6,000 கோடி) தொகையை கடந்த ஆண்டு வழங்கியது. இது அமெரிக்காவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் செயல் குறித்து அமெரிக்க துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள்) கூறியதாவது:-

அமெரிக்க பொருளாதார தடைகள் சட்டப்படி (கேட்சா) ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்குவதால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா அதிநவீன நிலை மற்றும் மிக உயர்ந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்ற நகர்கிறபோது, உண்மையில் அவர்கள் எந்த அமைப்பினுள் செயல்பட விரும்புகிறார்கள் என்பது கேள்வியாக மாறும்.

ஒரு கட்டத்தில் இந்தியா, தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களுக்கு ராணுவ ரீதியிலான உறுதிப்பாட்டை செய்ய வேண்டும். எங்களிடம் சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன.

ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்று வந்த பிறகு இரு தரப்பு வர்த்தகம் இப்போது 20 பில்லியன் டாலரை (சுமார் ரூ. 1½ லட்சம் கோடி) தற்போது தாண்டி இருக்கிறது.

இந்தியாவுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறோம். அதற்கான பெருமை, தற்போதைய நிர்வாகத்துக்கு உண்டு. அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும்.

21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களுக்கு குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி சாதனங்கள் போன்றவற்றால் ஏற்படுகிற அச்சுறுத்தல்களை சந்திக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad