இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா; இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,18,447- ஆக உயர்ந்துள்ளது
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவிலும் தனது கோரமுகத்தை காட்டி வரும் கொரோனா, நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவை பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியாவில் கடந்த 58 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

கடந்த  இரு  தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.  இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,18,447- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  48534-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை  3583- ஆக அதிகரித்துள்ளது.

மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில்  41642- பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனாவுக்கு  1454- பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 11726- ஆக உள்ளது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 203 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.
பீகாரில் 1982 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 593 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 217 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 139 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 128 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.

கோவாவில் 52 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 11,659 பேருக்கு பாதிப்பு; 194 பேர் பலி; 5567 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 1031 பேருக்கு பாதிப்பு; 15 பேர் பலி; 681 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 173 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 148 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 690 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 510 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 6227 பேருக்கு பாதிப்பு; 151 பேர் பலி; 3485 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 290 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 129 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 44 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 25 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 14 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 1103 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 393 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 20 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2028 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 1819 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 146 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 54 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 1605 பேருக்கு பாதிப்பு; 41 பேர் பலி; 571 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 1449 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 684 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1699 பேருக்கு பாதிப்பு; 45 பேர் பலி; 1035 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 3197 பேருக்கு பாதிப்பு; 259 பேர் பலி; 1193364 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2647 பேருக்கு பாதிப்பு; 53 பேர் பலி; 1709 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 5981 பேருக்கு பாதிப்பு; 200 பேர் பலி; 1349 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 3214 பேருக்கு பாதிப்பு; 270 பேர் பலி; 2843 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 152 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 59 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url