Type Here to Get Search Results !

விழுப்புரத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு: கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
விழுப்புரத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு: கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று மேலும் 49 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்கள் 49 பேரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு சேர்த்து நேற்று வரை விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135 ஆக இருந்தது.

25 பேருக்கு பாதிப்பு

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இவர்களில் திண்டிவனம் வைரபுரத்தை சேர்ந்த 3 பேருக்கும், விழுக்கத்தை சேர்ந்த 3 பேருக்கும், தேவனூரை சேர்ந்த ஒருவருக்கும், வானூர் தாலுகா புளிச்சப்பள்ளத்தை சேர்ந்த ஒருவருக்கும், நாரசிங்கனூரை சேர்ந்த ஒருவருக்கும், விக்கிரவாண்டி தாலுகா கொரளூரை சேர்ந்த 2 பேருக்கும், கப்பியாம்புலியூரை சேர்ந்த 2 பேருக்கும், விழுப்புரம் தாலுகா கலிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த 3 பேருக்கும், தாரணிப்பாக்கத்தை சேர்ந்த ஒருவருக்கும், மோட்சகுளத்தை சேர்ந்த ஒருவருக்கும் ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே கோயம்பேடு சந்தையில் வேலை செய்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 25 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

159 ஆக உயர்ந்தது

இவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159 ஆனது. இவர்களில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 128 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் இறந்து விட்டனர்.

மேலும் கொரோனால் பாதிக்கப்பட்ட 25 பேர் வசிக்கும் கிராமங்களை தடை செய்யப்பட்ட கிராமங்களாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இந்த கிராமங்களில் இருக்கும் மக்கள் வெளியே எங்கும் செல்லாமல் இருக்கும் வகையில் கிராமங்களின் பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad