Type Here to Get Search Results !

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,293; மிகப்பெரிய உச்சத்தை தொட்டது; நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், சுமாரான பாதிப்பு உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், மத்திய மந்திரிசபை செயலாளர் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் மாவட்டங்கள் மீண்டும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு எங்கெல்லாம் இரு மடங்கு ஆகி இருக்கிறது மற்றும் கண்காணிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சோதனைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் வாரந்திர அடிப்படையில் மீண்டும் வகைப்படுத்தி இருக்கிறது. அதன்படி 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், புனே, ஆமதாபாத் போன்ற பெரு நகரங்கள் சிவப்பு மண்டலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிவப்பு மண்டத்தில் 28 நாட்களும், ஆரஞ்சு மண்டலத்தில் தொடர்ந்து 14 நாட்களும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் அவை பச்சை மண்டலமாக இதுவரை வகைப்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆந்திராவில் 5 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலத்திலும் இடம்பெற்று இருக்கின்றன.

தெலுங்கானாவில் 6 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 18 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 9 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும், மராட்டியத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 6 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

புதுச்சேரி, அசாம், இமாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் சிவப்பு மண்டலம் இல்லை. இப்படி பல்வேறு மாநிலங்களும் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மாவட்டங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநகராட்சிகள் அல்லது நகராட்சிகள் மற்றும் பிற பகுதிகள் இருந்தால் அவற்றை தனி பிரிவுகளாக வகைப்படுத்திக் கொள்ளலாம். சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்கி கொரோனா பரவல் சங்கிலி தொற்றை உடைக்க வேண்டும். அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 1,755 பேருக்கு தொற்று உறுதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியதுகொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வு
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு  மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது. மொத்த பாதிப்புகள் 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 1061 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு - 37,336
சிகிச்சை பெறுபவர்கள் - 26,167
உயிரிழப்பு - 1,218
குணமடைந்தவர்கள் - 9,950

மராட்டியத்தில்  11,506 பேருக்கு கொரோனா; 1,879 பேர் குணமடைந்த நிலையில் 485 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குஜராத் - 4,721
டெல்லி - 3,738
மத்திய பிரதேசம் - 2,719
ராஜஸ்தான் - 2,666
உத்தரப்பிரதேசம் - 2,328

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 1,147 ஆக உயர்வடைந்து இருந்தது.  8,889 பேர் குணமடைந்தும், 25,007 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,218 ஆக உயர்வடைந்து உள்ளது.  9,951 பேர் குணமடைந்தும், 26,167 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43ல் இருந்து 37 ஆயிரத்து 336 ஆக உயர்வடைந்து உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad