Type Here to Get Search Results !

முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: இன்று நடக்கிறது; கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்: இன்று நடக்கிறது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கின.ஊரடங்கை தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

 மே 3ம் தேதிக்கு (நாளை) பிறகு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட வல்லுநர் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் 2வது வாரம் அறிவித்தார்.

இந்த குழு, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தனது இடைக்கால அறிக்கையை நேற்று முதல்வரிடம் சமர்ப்பித்தது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், மேலும் 2 வாரம் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்து அறிவித்தது குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்  சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
தமிழகத்தில் மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் நேற்று வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, நாகை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுநகர், மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக உள்ளன.

கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு
தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், ஒரு மாவட்டம் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  இவற்றில் கிருஷ்ணகிரி கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என அரசால் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அதிக அளவாக சென்னையில் 1,082 பேரும், தொடர்ந்து கோவையில் 141 பேரும் மற்றும் செங்கல்பட்டில் 86 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் 67 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  ஆந்திராவில் பணியாற்றி விட்டு திரும்பி வந்த அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.  இதனை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.  இதனால் பச்சை மண்டலம் என அறிவிக்கப்பட்டு இருந்த கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad