Type Here to Get Search Results !

நாளை முதல் ஊரடங்கு தளர்வு: ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை; கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
நாளை முதல் ஊரடங்கு தளர்வு: சென்னை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, வருகிற 17-ந்தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி வழங்கி இருப்பதோடு, கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை என்றும் அறிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனா தடுப்புப்பணியின் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னை வி.ஆர்.பிள்ளை தெருவில் ஒரு தன்னார்வலர் மூலம் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்

நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது.

உணவு மற்றும் காய்கறிகளை டெலிவிரி செய்யும் நபர்கள், தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சி துப்பக்கூடாது என மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. கொயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தபடுவார்கள். கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா தடுப்பு-போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன.

கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். சென்னையில் மூச்சுத்திணறல், காய்ச்சல், சளி, இருமல் இருப்பவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வர வேண்டும்.

சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் 20% முதல் 25% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்த பகுதி சீல் வைக்கப்படுகிறது.

முக கவசத்தை கழற்றிவிட்டு பேசுவது முற்றிலும் தவறானது. அறிகுறி இல்லாமல் பரவுதால் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்துகிறோம். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவம் போல் பயன்படுத்தலாம்.அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவமுறைப்படி மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆதாரப்பூர்வமான மருந்துகளே கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறிகுறி இல்லாமல் பரவுதால் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்துகிறோம். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு அவசியம்.

முன்கள பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். முன்கள பணியாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்த தனி திட்டம்.களப்பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகமான எண்ணிக்கையில் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மருத்துவமனைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். காவல்துறை உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தீவிரமாக செயல்பட முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளை முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுடன் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  சென்னையில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.  சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.  இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிய அசோக்நகரை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை பெரியமேடு ஷ்ரிங்கர் தெருவில் அடுத்தடுத்து 5 வீடுகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  இதேபோன்று கோயம்பேடு சந்தையில் இருந்து தஞ்சை சென்ற பழவியாபாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad