Type Here to Get Search Results !

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க இந்தியாவில் புதிய தடுப்பூசி; பக்க விளைவுகளுக்கு வாய்ப்பு; கொரோனா நோயாளிகளுக்கு Hydroxychloroquine மருந்தை பயன்படுத்தாதீங்க

கொரோனா பாதிப்புகளின் இறப்புவிகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
இந்தியாவில் விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்றுநோய் இந்தியாவில் காட்டுத்தீ போல் தொடர்ந்து பரவி வருவதால் அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது, அவர் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக மே 3 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கின் 2-வது கட்டம் இன்றுடன் 13-வது நாளை அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது.பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளின் இறப்பு விகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது இந்தியாவில் விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தொழுநோயை கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற தடுப்பு மருந்து, கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடும் என்று இந்திய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். காசநோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட பி.சி.ஜி. தடுப்பு மருந்துடன் தொடர்பு உடையதுதான் இந்த மைக்கோ பாக்டீரியம் மருந்து என்று கூறப்படுகிறது.

எனவே கொரோனாவுக்கும் இது பயனளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற அடிப்படையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.இந்த ஆராய்ச்சிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்த நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் மைக்கோபாக்டீரியம் டபிள்யூ  ஆய்வை நடத்தி உள்ளனர். எய்ம்ஸ் டெல்லி மற்றும் எய்ம்ஸ் போபால் ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு இணைப்பாக மைக்கோபாக்டீரியம் டபிள்யூ (எம்.டபிள்யூ) தடுப்பூசியை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்.

பொதுவாக தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது, முதலில் தொழுநோய்க்கான நோயெதிர்ப்புத் தடுப்புக்காக உருவாக்கப்பட்டது.

எம்டபிள்யூ தடுப்பூசி (வெப்பத்தால் கொல்லப்பட்ட மைக்கோபாக்டீரியம் இன்டிகஸ் பிரானி) என்பது கொரோனா வைரஸுக்காக தாயாரிக்கபட்ட  ஒரு தடுப்பூசி அல்ல, ஆனால் அது ஒரு துணைப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கூறி உள்ளது.

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் முடிவடைந்த மல்டி சென்டர் சோதனையில், கடுமையாக பாதிக்கப்பட்ட ஐ.சி.யூ நோயாளிகளின்  இறப்பைக் எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.

கொரோனா நோயாளிகளிடம் காணப்படும் சைட்டோகைனை எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கக்கூடும், இதனால் இந்த நோயாளிகளை நிர்வகிப்பதில் பலனளிக்கும் மற்றும் இறப்பு விகிதத்தையும் குறைக்கும். ஆய்வுக்கு முந்தைய கட்டத்தில், கொரோனா உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளில் எம்டபிள்யூ தடுப்பூசி  இன் பாதுகாப்பை நாங்கள் ஆய்வு செய்து உள்ளோம். மேலும் குறுகிய கால பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆதரவு மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்னரே நீண்டகால பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில்  பயன்பாட்டின் தாக்கம் அறியப்படும், இது மூன்று மையங்களிலும் விரைவில் தொடங்கப்படும். முடிவுகளின் விளைவு மற்றும் அதன் பயன்பாடு பற்றி சொல்வது  இது ஆரம்ப கட்டம் தான் எனக் கூறினார்.

பக்க விளைவுகளுக்கு வாய்ப்பு; கொரோனா நோயாளிகளுக்கு Hydroxychloroquine மருந்தை பயன்படுத்தாதீங்க: கனடா சுகாதாரத்துறை எச்சிக்கை
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என கனடா சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சீனாவில்  முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு  நாடுகளை சேர்ந்த 206,988 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,994,722 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 878,707 பேர்  குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பாதிப்புக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது. மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்வதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார்.  ஆனால், இந்த மருந்துகளால் கொரோனா நோயாளிகளுக்கு கடும் பக்க விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை  எச்சரித்தது. நோயாளியின் உடல்நலத்தை நன்கு பரிசோதனை செய்த பிறகு தான் இதுபோன்ற மருந்துகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என  அறிவுறுத்தினர்.

இந்நிலையில் மலேரியா தடுப்பு மருந்தான  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயினை கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம்  என கனடா சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு மருந்துகளால் கடும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க  வேண்டாம் என கனடா சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad