Type Here to Get Search Results !

கொரோனா வைரசை அழிக்கும் கிருமி நாசினியை மனித உடலில் செலுத்தினால் என்ன? கொரோனா தடுப்பூசி விரைவில் தயார்: டொனால்டு டிரம்ப்

கொரோனா வைரசை அழிக்கும் லைசால்-டெட்டால் கிருமி நாசினியை மனித உடலில் செலுத்தினால் என்ன? கேள்வி விடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிபுணர்களை திகைக்கவைத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிபுணர்களுடனான உரையாடலின் போது லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் கொரோனா வைரசை அழிப்பதால் அதனை மனித  உடலுக்குள் செலுத்திக்கொள்வதால் கொரோனாவிலிருந்து விடுபடமுடியுமா என்பதை சோதித்துப்பார்ப்பது தொடர்பாக கிண்டலாக கேள்வி எழுப்பி இருந்தார்.ஆராய்ச்சியாளர்கள் இந்த கிருமிநாசினிகளை கொரோனா நோயாளிகளின் உடலில் செலுத்தி என்ன நடக்கிறது என கண்டறிய முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தார் டிரம்ப்.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, தங்களிடம் லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்திக்கொள்வது பயனளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக லைசால் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதற்கு பதிலளிக்கும் விதமாக, எக்காரணம் கொண்டும் தங்கள் தயாரிப்புகளை யாரும் சாப்பிடக்கூடாது என லைசால் மற்றும் டெட்டால் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லைசால் மற்றும் டெட்டால் போன்ற கிருமி நாசபி  தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளைக் குடிக்கவோ, உடலில் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளவோ வேண்டாம் என மக்களை வலியுறுத்தியுள்ளனர்.எங்கள் தயாரிப்புகள் எந்த நோக்கத்துக்காக தயாரிக்கப்பட்டனவோ, அதற்காக மட்டுமே, அதுவும் எப்படி பயன்படுத்தவேண்டும் என தயாரிப்பின் மீது கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பலி 50,000ஐ கடந்தது; கொரோனா தடுப்பூசி விரைவில் தயார்: அதிபர் டொனால்டு டிரம்ப் தடாலடி கருத்து
சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. ஐரோப்பியாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர். அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,110 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 49,845 ஆக உயர்ந்தது. புதிதாக 30,713 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 8,80,204 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 85,624 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். வட அமெரிக்காவில் இதுவரை 9,47,120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53,504 பேர் பலியாகி உள்ளனர். இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக கனடாவில் 42,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது.

அங்கு 1,03,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,073 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிகபட்சமாக 49,492 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘​​அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி கண்டறிய தீவிரமாக செயல்பட்டு வரும்நிலையில், நாங்கள் தடுப்பூசி கண்டறிவதில்  மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்’ என்றார். அவருடன் துணைத் தலைவர் மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் டாஸ்க்ஃபோர்ஸ் ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிர்க்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். அவர்கள், கொரோனா வைரசிற்கான தடுப்பூசி குறித்த தகவல்களை வழங்கினர். ஏற்கனவே, அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘தடுப்பூசி கண்டறிவதில் சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான விஞ்ஞானிகள் எங்களிடம் உள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இப்போது தடுப்பூசியை கண்டறிவதில் மிக நெருக்கமாக இல்லை. பரிசோதனை தொடங்குவதில் சிறிது காலம் ஆகும். ஆனால் நாங்கள் அதை முடிப்போம்’ என்றார். அதேபோல், ‘ஒரு தடுப்பூசியை அங்கீகரிக்க 12-18 மாதங்கள் ஆகும்’ என்று அமெரிக்காவின் சிறந்த தொற்று நோய்கள் தடுப்பு ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி கூறியிருந்தார். ‘தடுப்பூசி தயாரிக்க குறைந்தது 12 - 18 மாதங்கள் ஆகும்’ என்று பெரும்பாலான சுகாதார நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தற்போது டிரம்ப் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad