Type Here to Get Search Results !

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: பாதிப்பு 28.28 லட்சத்தை தாண்டியது; இலங்கையில் 30 வீரர்களுக்கு கொரோனா

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: பாதிப்பு 28.28 லட்சத்தை தாண்டியது
 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.97 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 197,090 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,828,575 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 798,371 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,531 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 4,814 பேர் குணமடைந்தனர்.
 
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 52,184 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 924,996 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,969 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 192,994 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,524 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,764 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,245 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159,828 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 19,506 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143,464 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,574 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88,194 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,679 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,293 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,760 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154,999 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,289 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,535 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,804 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 2,600 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,589 பேரும், பிரேசில் நாட்டில் 3,670 பேரும், சுவீடன் நாட்டில் 2,152 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,302 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,014 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,069 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

இலங்கையில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கடற்படை முகாம் மூடப்பட்டது
இலங்கையில் 30 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் கடற்படை முகாம் மூடப்பட்டு உள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகரான வெல்சாராவில் கடற்படை முகாம் உள்ளது. அங்கு ஒரு அதிகாரிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பரிசோதனை நடத்தியதில், மொத்தம் 30 பேருக்கு கொரோனா தாக்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த முகாம், தனிமைப்படுத்தப்பட்ட மண்டலமாக அறிவித்து மூடப்பட்டுள்ளது. அங்குள்ள எல்லா வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் பலியாகி உள்ளனர். கொழும்பு மற்றும் புறநகர்களில் ஊரடங்கு நீடிக்கிறது. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad