கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 1.20 லட்சம் பேர் பலி

உலகம் முழுவதும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனா தாக்கியதில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் நேற்றைய நிலவர புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 13 ஆக இருக்கிறது.  பலியானவர்களில் 70 சதவீதம் பேர் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் 81 ஆயிரத்து 474 பேர் ஆவர்.

இதற்கிடையே அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் அமைந்துள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தகவல் மையத்தின் புள்ளி விவரம், உலகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 914 பேர் பலியானதாக காட்டுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url