ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா 10 மாத குழந்தை உள்பட பாதிப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா  10 மாத குழந்தை உள்பட  பாதிப்பு தெலுங்கானாவில் 10 மாத குழந்தை உள்பட உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், நாடு முழுவதும் கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. எனவே இந்திய அரசு தீவிரமாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி  ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுவரை இந்தியாவில், 10,363பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 10மாத குழந்தையும் அடங்கும். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 24 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தபோதிலும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.24 பேரும் சார்மினார் அருகே உள்ள அரசு நிஜாமியா பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளனர

பாதிக்கப்பட்ட 17 பேரும் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கல்.அவர்கள், வசித்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி தெலுங்கானாவில் 592 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவற்றில் ஐதராபாத்தில் பெரும் வழக்குகள் உள்ளன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url