Type Here to Get Search Results !

நாகை மாவட்டத்தில் ஒரே நாளில், 12 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்வு

நாகை மாவட்டத்தில் இதுவரை 3,383 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் தடுப்பு மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

வருகிற 14-ந் தேதியுடன் 21 நாள் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனாலும் சமூக பரவலாக கொரோனா தொற்று இன்னும் மாறவில்லை. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளின் எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்கு மருத்துவக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக நாகை மாவட்டம் மாறி வருகிறது. நாகை மாவட்டத்தில் இதுவரை 3,383 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

கடந்த 9-ந் தேதி நிலவரப்படி 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த னர். இந்த 12 பேரும் நாகை, நாகூர், பொரவச்சேரி, திருக்களாச்சேரி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் வசித்து வந்த பகுதிகளுக்குள் வெளி ஆட்கள் நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் தூவுவது உள்ளிட்ட சுகாதார பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆனாலும் நாகையை கொரோனா எனும் அபாயம் தொடர்ந்து துரத்தி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் 9 பேர் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். 3 பேர் நாகூரை சேர்ந்தவர்கள். இவர்களை ஏற்கனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

அவர்களுடைய ரத்த மாதிரி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

full-width நாகை மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து இருப்பதால் நாகை மாவட்ட பகுதி அபாயகரமான சிவப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad