பெரம்பலூரில், 470 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - 6 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் 470 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். 6 பேரை கைது செய்தனர்.
full-width பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 29). இவர் தனது வயலில் சாராயம் தயாரிப்பதற்காக பேரலில் 320 லிட்டர் ஊறல் போட்டு வைத்திருந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார், சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்த னர். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா பள்ளக்காளிங்கராயநல்லூர் காலனி தெருவை சேர்ந்த ரவி ( 45), அறிவழகன்(35) ஆகிய 2 பேர், அதே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் தனித்தனியாக சாராயம் தயாரிப்பதற்காக பானையில் ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் மொத்தம் 100 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி, கீழே ஊற்றி அழித்தனர். மேலும் ரவி, அறிவழகனை கைது செய்தனர்.

இதேபோல் பள்ளக்காளிங்கராயநல்லூர் சுடுகாடு அருகே சாராயம் தயாரிப்பதற்காக 50 லிட்டர் ஊறல் போட்டு வைத்திருந்த, அதே பகுதியை சேர்ந்த ராஜவேலுவை(46) போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே பள்ளக்காளிங்கராயநல்லூர் கிராமத்தில் சாராயம் தயாரிக்க 150 லிட்டர் ஊறல் போட்ட வழக்கில் ஆசைதம்பி(50), இளஞ்செழியன்(55) ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர். அவர்களையும் நேற்று பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url