பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு இலங்கை மறுப்பு






இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் ஜிலானி ஐக்கிய அரபு எமீரகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனக்கு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் வாட்ஸ்அப் வாயிலாக பாலியல் தொந்தரவு செய்தார் என்ற குற்றச்சாட்டை  முன்வைத்தார்.

இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டது. இதுதொடர்பாக  வெளியான அறிக்கையில், குறிப்பிட்ட நபர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு தனியார் ஊடக செய்தியாளர், அவர் தங்கள் நிர்வாகத்தினை சேர்ந்தவர் இல்லை என ஜிலானிக்கு தெரியும். எனினும் அவர் தெரிந்தே தான் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அவர் எங்கள் நிர்வாகத்திடமும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Shd I name & shame on him? This is how Sri Lankan official harassed me on what’s ap @OfficialSLC@TheRealPCB@TheRealPCBMedia@Asiantradetvpic.twitter.com/7zseJN6ZIg

— Munazza Jilani (@munazzajilani) October 23, 2017
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url