ராகுல் காந்தி திருமணம் எப்போது? அவரே அளித்த பதில்
புதுடெல்லி,
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு 47 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியிடம் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் விதியின் மீது நம்பிக்கை உள்ளவன். எப்போது எனது திருமணம் நடக்க வேண்டும் என்று விதி இருக்கிறதோ, அப்போது நடக்கும்” என்று கூறினார்.
மேலும், “எனது வாழ்க்கையில் விளையாட்டுக்கு முக்கிய இடம் உண்டு. தினந்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து வருகிறேன். ஜப்பான் தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். நீச்சல் பயிற்சியிலும் ஈடுபடுவது வழக்கம். இவை எல்லாம் எனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டவை. பொதுவாக, இவற்றை நான் வெளியே சொல்வது இல்லை” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
