பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி செய்வினை வைத்து வெற்றி இலங்கை மறுப்பு




கொழும்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு பிறகு, இலங்கையை சேர்ந்த பிரபல பெண் மந்திரவாதி கங்கா சொய்சா தனது பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு போஸ்ட்தான் இந்த பரபரப்புக்கு காரணம்.

கங்கா சொய்சா தனது பேஸ்புக் பக்கத்தில் இலங்கை அணி வெற்றிக்கு, தான் பில்லி, சூனியம் செய்ததுதான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

தனது வீட்டுக்கு இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் வந்திருந்ததாகவும், அவர்தான் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை வெல்ல மந்திரம் போட்டு பூஜை செய்யும்படியும் கேட்டுக்கொண்டதாகவும், கங்கா கூறியுள்ளார். அதிர்ச்சியளிக்கும் விதமாக, சண்டிமால் தனது வீட்டில் இருந்தபோது எடுத்த போட்டோவையும் அவர் பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.

அந்த போஸ்டில் அவர் வெளியிட்ட அடுத்த கருத்துதான் இதில் ஸ்பெஷல். எனது நன்றியை அமைச்சர் தயாசிரி ஜெயசேகராவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர்தான் சண்டிமாலை என்னை பார்க்க அனுப்பி வைத்தார். இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலத்தை நான் உருவாக்குவேன். இவ்வாறு கங்கா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அறிந்ததும், அமைச்சர் ஜெயசேகரா கடும் கோபமடைந்துள்ளார். தன்னை பற்றிய அவதூறு போஸ்டுக்காக, கங்காவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று ஜெயசேகரா எச்சரித்தார். அமைச்சர் எச்சரிக்கையை தொடர்ந்து, அந்த போஸ்டை கங்கா டெலிட் செய்துள்ளார்.

இதுகுறித்து ஜெயசேகரா கூறுகையில், உண்மையிலேயே கங்கா செய்வினை வைத்துதான், இலங்கை வெற்றி பெற்றது என்றால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் இலங்கை படுதோல்வியை சந்தித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url