Type Here to Get Search Results !

ஜோடியை பிரிந்து தனியாக சுற்றும் நடிகைகள்




‘மதராஸ பட்டணம்’ நடிகை எமி ஜாக்ஸன் லண்டனில் பிறந்தவர். அதற்கேற்ப அவரது பழக்க வழக்கமும் மேற்கத்திய பாணியிலேயே உள்ளது. தமிழில் வெளியான ‘விண்ணை தாண்டி வருவாயா’ இந்தி ரீமேக்கில் நடித்தார் எமி ஜாக்ஸன். அதில் ஹீரோவாக நடித்த பிரதீக்குடன் எமிக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றனர். ஒரு கட்டத்தில் பிரதீக் பெயரை எமியும், எமி பெயரை பிரதீக்கும் பச்சை குத்திக்கொண்டனர். ஆனால் சில மாதங்களிலேயே காதல் கசந்தது. இருவரும் பிரேக் அப் செய்துகொண்டனர். இதையடுத்து வௌிநாட்டு வாலிபர் டாம் ஸ்டாக்டன் உடன் எமி பழக ஆரம்பித்து அவருடன் டேட்டிங் சென்றார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் டாம் மடி மீது எமி அமர்ந்தபடி அவருக்கு முத்தமிடுவதுபோல் போஸ் தந்த புகைப்படத்தையும் வெளியிட்டார். நயன்தாரா, திரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, அக்‌ஷரா, அஞ்சலி உள்ளிட்ட பல நடிகைகள் பாய்பிரண்டுடன் டேட்டிங் செல்வதும் பின்னர் பிரேக் அப் செய்வதும் கோலிவுட்டில் அவ்வபோது நடந்தது. ஆனால் தங்களது பாய்பிரண்ட் விஷயத்தையோ, அவர்களுடன் டேட்டிங் சென்ற விஷயத்தையோ வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை. ஜோடியாக சுற்றித்திரிந்த திரிஷா, அக்‌ஷரா போன்றவர்கள் தற்போது தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் நடிகை புமி பெடென்கர். டாய்லெட் படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

கடந்த காலத்தில் பல ஆண்களுடன் டேட்டிங் சென்றதாக இவர் ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார். பழைய பாய்பிரண்ட்களுடன் இப்போதும் நட்பு முறையில் பழகிக்கொண்டிருக்கும் அவர், அவர்களுடனான உறவு தனக்கு அனுபவமாக அமைந்தது என்று வெளிப்படையாக கூறி உள்ளார். இப்போது யாருடன் டேட்டிங் செய்கிறீர்கள் என்றபோது. தற்போது நான் தனியாகவே இருக்கிறேன். அதற்காக ஆண்களுடனான உறவுக்கு எதிரானவள் அல்ல. அந்த உறவு நீடித்திருப்பதில்லை என்பதுதான் என் எண்ணம். வாழ்க்கை துணை என்பவருக்கு அதற்குமேலான தகுதிகள் தேவைப்படுகிறது’ என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad