Type Here to Get Search Results !

மாஜி காதலன் பெயரை பாஸிட்டிவிட்டி என்று மாற்றிய நயன்தாரா





தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. நயன்தாரா தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். அதாவது கதாநாயகி வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கிப் பழகி வருகிறார் நயன்தாரா. இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை அவர்கள் உறுதி செய்யாமலிருந்தனர். சமீபத்தில் அவர்களின் காதல் குட்டு அம்பலமானது.

விக்னேஷ் சிவன் பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக அவரை தனது சொந்த செலவில் நியூயார்க் அழைத்துச் சென்றார் நயன்தாரா. அங்கு தடபுடலாக பிறந்த தினத்தை கொண்டாடி அசத்தியதுடன் அன்பு பரிசும் தந்தார். புகைப்படங்களையும் இணைய தளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் நயன்தாராவின் கையில் புதிய டாட்டூ ஒன்று வரைந்துள்ளார். அதில் தனது முன்னாள் காதலரின் பெயரான பிரபுதேவாவா பெயர் இருந்தது. இந்த டாட்டூவை பாஸிட்டிவிட்டி (Positivity) என்று மாற்றியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது காதல் தோல்வியை கூட பாஸிட்டிவிட்டியாக நயன்தாரா மாற்றி விட்டார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad