Type Here to Get Search Results !

உடல் வலி, களைப்பு தீர எளிய வழி





உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்யவேண்டுமானாலும், பிறகு செய்துகொள்ளலாம்என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை,  எதிலும் ஆர்வமின்மை, எப்பொழுதுபார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும் மனநிலை, படுத்தால் தூக்கம்வராது, தூக்கம் வராததால்  உடல் ஓய்வுபெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும்அசதி - இவற்றுக்கு முக்கிய காரணம், உடலில் ஹீமோகுளோபின் குறைதல்.  உடலில்ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு.உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12-16கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே  குறையும்பொழுது, ரத்தசோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.ரத்தத்தில் எவ்வளவு  ஹீமோகுளோபின் இருக்கிறது என்பது, ரத்தத்தை பரிசோதிக்கும்பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் அளவு குறையும்பொழுது, உடல் மெலிதல்,  களைப்பு,இயலாமை முதலியன ஏற்படும்.ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்பொழுது ரத்தம் நல்ல சிவப்பு நிறமாக காட்சியளித்து, உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும், நாம் உண்ணும்  உணவிலுள்ளசத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி,அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய  திரவங்களை உற்பத்திசெய்ய வைக்கிறது.

உடலில், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்துகடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.  அவற்றை வாங்கி 72 நல்லகருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர்நிறைய எடுத்துக்கொண்டு, அதில்  முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில்போட்டு, இரவு முழுவதும் ஊற விடுங்கள். காலையில் ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம்  ஊறிய நீரை குடியுங்கள். பிறகு, மதியம் 12மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6மணிக்கு கடைசியாக  உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad