ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் கிறிஸ்கெயில் வெற்றி



மெல்போர்ன்,




கடந்த 2015 ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரின் போது, நியூ சவுத்வேல்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில், ஓய்வு நேரத்தின் போது, தங்கள் அணி வீரர்களின் உதவிக்காக பணியில் அமர்த்தப்பட்டு இருந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மசாஜ் தெரபிஸ்ட் ஆக பணி புரிந்த அந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம்,  ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த செய்தியை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மார்னிங் ஹெரால்டு, தி ஏஜ், கான்பெரா டைம்ஸ் ஆகிய நாளிதழ்கள் கடந்த 2016 ஜனவரியில் செய்தி வெளியிட்டன. இதை எதிர்த்து கிறிஸ் கெயில் தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த சவுத்வேல்ஸ் நீதிமன்றம், கிறிஸ் கெயிலுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி, கிறிஸ் கெயில் மீது தவறு இல்லை என்று தீர்ப்பளித்ததுள்ளது. நஷ்ட ஈடாக எவ்வளவு தொகை கிறிஸ் கெயில் கோரியிருந்தார் என்பது குறித்தோ, நீதிமன்ற இழப்பீடும் வழங்க உத்தரவிட்டதா? என்பது குறித்தோ எந்த செய்தியும் தற்போது வரை வெளிவரவில்லை.

இந்த வழக்கு விசாரணையையொட்டி நீதிமன்றத்துக்கு வந்து இருந்த கிறிஸ் கெயில், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தான் நல்லவன் எனவும், எந்த தவறையும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக ஃபைர்ஃபக்ஸ் மீடீயா தெரிவித்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url