Type Here to Get Search Results !

அரைகுறை ஆடையுடன் செல்ஃபியா? நடிகைக்கு செம டோஸ்





நடிகைகள் கவர்ச்சி படங்கள் வெளியிடுவது சகஜமாக நடக்கிறது. ஒரு சில நடிகைகள் இதுபோல் செய்யும்போது அவர்களை நெட்டிஸன்கள் கலாய்ப்பதுடன், திட்டியும் தீர்க்கின்றனர். தற்போது அந்த சிக்கலில் சிக்கி இருக்கிறார் ஒரு நடிகை. இந்தி நடிகர் ஆமிர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்தவர் பாத்திமா சனா சயிக். இவர் தனது இணைய தள பக்கத்தில் சேலையை அரைகுறையாக உடுத்திக் கொண்டு அதை செல்ஃபி படமாக எடுத்து வெளியிட்டார். அத்துடன் ‘ஷேம்லெஸ் செல்ஃபி’ (வெட்கமில்லாத செல்ஃபி) என்று அதனை அடிக்கோடிட்டு குறிப்பிட்டிருந்தார்.

அதைக்கண்டு கோபம் அடைந்த ரசிகர்கள் பலர் ‘மரியாதை கெட்டத்தனமாக ஆடை உடுத்தியிருக்கிறீர்கள்’ என்றும், ‘இது வெட்ககேடானது’ என்றும் வசை பாடியிருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர், நடிகைக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள கருத்தில், ‘இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களை பாத்திமா கண்டுகொள்ளத் தேவையில்லை’ என ஆறுதல் கூறியிருக்கின்றனர். பாத்திமாவின் இந்த சேட்டை இப்போது மட்டுமல்ல கடந்த முறை ரம்ஜான் நோன்பு நாளில் நீச்சல் உடை அணிந்த படத்தை வெளியிட்டு வாங்கிக்கட்டிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad