Type Here to Get Search Results !

இனி கூகுள் மேப் மூலம் மற்ற கிரகங்களையும் காணலாம்





லாஸ் ஏஞ்சல்ஸ்: இனி கூகுள் மேப் மூலம் பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகங்களையும் பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தேடுதல் பொறிதான் இப்போது உலகத்தின் அதிகபட்ச மக்கள் பயன்படுத்தும் சர்ச் இன்ஜினாகும். இதன் மூலம்தான் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் தங்களுக்கு தேவையான விஷயங்களை தேடுதல், மொழி மாற்றம் செய்தல், தங்களுடைய பதிவுகளை வெளியிடுதல் என்பது உட்பட பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

பல நாடுகளில் இலவச இன்டர்நெட் வசதியையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் இலவசமாக இந்த வசதியை விரிவுப்படுத்தும் வகையில், வானில் பலூன்களை நிலை நிறுத்தி, இந்த வசதியை தருவது குறித்து அந்நிறுவனம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்பில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புதிய வசதியின்படி, கூகுள் மேப்பில், சூரிய குடும்பத்தில் இருக்கும் சனி கிரகத்தையும் பார்க்க முடியும். இதுதவிர சனி கிரகத்தின் நிலவுகளையும் இதில் பார்க்க முடியும். என்சிலடஸ், டைட்டன், மிமாஸ் என்று விரியும் அதன் எல்லை, புளூட்டோ கிரகம் வரை நீள்கிறது.

சனி கிரகத்தின் ஆறாவது நிலவான என்சிலடசின் தரைப்பகுதியில் தண்ணீர் இருந்ததை அமெரிக்காவின் காசினி விண்கலம் கண்டுபிடித்தது. அது பற்றிய விவரங்களுடன் கூகுள் மேப்பில் என்சிலடசின் தரைப்பகுதியையும் காண முடியும். இதேபோல் சனியின் மிகப்பெரிய நிலவான டைனின் தரைப்பகுதியில் மீத்தேன் படலம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதையும் கூகுள் மேப்பில் காண முடியும். விட்டால் அண்டை கிரகத்தில் இருக்கும் மனிதர்களையும் கூகுள் பார்க்க வைத்துவிடும்போல.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad