Type Here to Get Search Results !

சசிகலா இன்று பரோலில் வெளிவர வாய்ப்பு: பரோல் மனு மீது கர்நாடகா சிறைத்துறை நடவடிக்கை







பெங்களூரு: சென்னை மாநகர காவல் ஆணையரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் வழங்காததால் சசிகலாவுக்கு பரோல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது. சசிகலா பரோல் மனுவானது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அதிகாரிகள், அடுத்ததாக சென்னைக்கு அவர் செல்ல வேண்டும் என்பதால், சென்னையில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு, பெங்களூரில் இருக்கக்கூடிய சிறைத்துறை அதிகாரிகள் மின் அஞ்சலை அனுப்பியிருந்தனர். இந்த மின்அஞ்சலுக்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை என்பது தான் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை அடிப்படியாக வைத்து பார்க்கும்போது, சசிகலாவுக்கு பரோல் கிடைப்பது தாமதம் ஏற்பட்டு வருகிறது.  

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் கணவர், நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அவரை பார்க்க, பரோல் கேட்டு, சிறை அதிகாரிகளிடம், சசிகலா விண்ணப்பித்தார். 

முதலில், 'முறையான ஆவணங்கள் இல்லை' என, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக, உரிய ஆவணங்களுடன் மனு செய்தார். அதைத் தொடர்ந்து, கர்நாடக சிறை துறையினர், தமிழக காவல் துறையினரிடம், 'பரோல் வழங்குவதில் ஆட்சேபனை உள்ளதா' என, கேட்டனர். இதற்கு இன்னும் சென்னை காவல்துறையினரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்று பெங்களூரு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad