உலகின் விலை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மெஸ்சியை முந்தினார் விராட் கோலி






மும்பை, 

போர்பஸ் பத்திரிகை விலை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களில் பட்டியலை வெளியிட் டுள்ளது. உலகின் ‘டாப் 10’ விளையாட்டு வீரர்களில் மிகவும் மதிப்பு மிக்கவர்களில் வீராட் கோலி 7வது இடத்தில் உள்ளார். அவரது மதிப்பு ரூ.93 கோடியாகும். பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி ரூ.87 கோடி விலை மதிப்புடன் 9-வது இடத்தில் உள்ளார். 

மெஸ்சியை முந்தும் அளவுக்கு வீராட் கோலி மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். தனது அபாரமான ஆட்டம் மூலம் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

மிகவும் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) முதல் இடத்தில் உள்ளார். அவரது விலை மதிப்பு ரூ.240 கோடியாகும். 100 மீட்டர் ஓட்டத்தின் உலக சாதனையாளரான உசேன் போல்ட் (ஜமைக்கா) 3-வது இடத்திலும் (ரூ.174 கோடி), கால்பந்து வீரர் கிறிஸ்டியானே ரொனால்டோ (போர்ச்சுக்கல்) 4-வது இடத்திலும் (ரூ.139 கோடி), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் (அமெரிக்கா) 6-வது இடத்திலும் (ரூ.107 கோடி) உள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url