புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு டிவி ரிமோட் இனி வேண்டாம் கையசைத்தால் சேனல் மாறும்




லண்டன்: டிவி ரிமோட் பயன்படுத்துவதற்கு பதில் கையசைத்தாலே சேனல் மாறக்கூடிய நவீன தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டிவி சேனல்களை மாற்ற ரிமோட்டை பயன்படுத்தும் தொழில்நுட்பம் தான் தற்போது உள்ளது. ரிமோட் இல்லாமல் சேனல்களை மாற்றுவது குறித்து இங்கிலாந்தில் உள்ள லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். 2002ல் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் நடிகர் டாம் குரூஸ் தனது கை மற்றும் சைகை மூலம் திரையின் படத்தை மாற்றியதை மையமாக வைத்து இந்த ஆராய்ச்சி நடந்தது.

அதன் அடிப்படையில் சேனல்களை மாற்றுவது, ஒலியின் அளவை கூட்டுவது, டிவியை பயன்படுத்துவது உள்ளிட்ட அத்தனையும் கை சைகை மூலமோ அல்லது நமது உடல் அசைவு மூலமோ மாற்றும் நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வெப் கேமரா மட்டும் போதும். டிவி திரையில் அங்கும் இங்கும் அசையும் புள்ளி மூலம் நமது உடல் அசைவு கண்காணிக்கப்பட்டு அதன் மூலம் டிவியின் இயக்கம் நடைபெறும். கை அல்லது தலை அல்லது குறிப்பிடத்தக்க உடல் இயக்கம் தான் ஒலி அளவை கூட்டுவது மற்றும் சேனல் மாற்றுவது உள்ளிட்டவைகளுக்கு குறியீடாக அமையும்.

இந்த நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த குழு தலைவர் கிறிஸ்டோபர் கிளார்க் கூறுகையில், “உடல் சைகை மூலம் டிவி இயக்கத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தும் நபர்களுக்கு உபயோகமாக இருக்கும். இதற்கு ஒரு வெப் கேமரா மட்டும் போதும். பயனாளர்கள் தங்கள் பணிகளை நிறுத்தாமல் டிவி இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நபர்களும் ஒரு ரிமோட்டாக மாறுவார்கள். இந்த தொழில்நுட்பம் இந்த மாத இறுதியில் கனடாவில் நடைபெறும் தொழில்நுட்ப கண்காட்சியில் முன்வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url