Type Here to Get Search Results !

எச் 1 பி விசா வழங்கும் பணிகள் தொடக்கம்







வாஷிங்டன்: அமெரிக்கா செல்ல எச் 1 பி விசா கேட்டு பலர் விண்ணப்பித்தனர். இந்த எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உயர்ந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் அடியோடு நிறுத்தப்பட்டன. செப்டம்பர் மாதம் மட்டும் அவசர தேவைக்காக சில பிரிவினர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விசா வழங்கப்பட்டது. அதன்பின் யாருக்கும் எச் 1 பி விசா வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மீண்டும் எச் 1 பி விசா வழங்கும் பணிகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவை இயக்குனரகம் தொடங்கி உள்ளது. அனைத்து வகையிலான எச் 1 பி விசாக்களுக்கும் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அந்த அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு துறைகளில் சிறந்த வல்லுநர்களின் தேவை தற்போது அமெரிக்க நிறுவனங்களில் அதிகரித்து உள்ளது. எனவே, வெளிநாடுகளில் சிறந்து விளங்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த வசதியாக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad