‘பேக்லெஸ்’ உடையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை மகள்
லோ கட் பேஷன் பெயரில் பல ஹீரோயின்கள் அணியும் டாப்ஸ் ரொம்பவும் குட்டியாக தைக்கப்பட்டு முன்புறம் பெரும்பகுதி தெரியும் அளவுக்கு உடை அணிவது டிரெண்டாக இருந்து வந்தது. தற்போது பேக்லெஸ் பேஷன் அறிமுகமாகியிருக்கிறது. முதுகுப்பகுதி முழுவதும் ஆடையே இல்லாமல் ஓப்பனாக விடுவதுதான் இந்த பேஷன். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு புறப்பட்டவர் தனது காரில் அமர சென்றபோது அங்கு நின்றிருந்த புகைப்படக்காரர்கள் திடீரென்று பரபரப்பாகி படம் எடுத்துத் தள்ளினர்.
முதுகுபகுதி முழுவதும் பளிச்சென தெரியும் அப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அப்படத்தை பார்த்தவர்கள் பொது நிகழ்ச்சிக்கு வந்த ஜான்வி எப்படி டாப்லெஸ் ஆக வந்தார் என அதிர்ச்சி அடைந்தனர். விஷயமே வேறு. முன்புறம் ஜான்வி ஜிகுஜிகு டாப்ஸ் அணிந்திருந்தார். முதுகுப்பகுதியை உடை கவர் செய்யாதபடி தைக்கப்பட்டிருந்த அந்த டாப்ஸை ஒரு நூலில் மட்டுமே இழுத்து கட்டியிருந்தார். நூலிழை அவிழ்ந்திருந்தால் என்னவாகும் என்று கற்பனைக்கு போகாதீர்கள். பின்புறம் முழுவதும் கவர்ச்சியாக பளிச்சிட்டு வந்த ஜான்விதான் அந்நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.