Type Here to Get Search Results !

டிஐஜி ரூபா வாழ்க்கை படமாகிறது : நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிக்க வாய்ப்பு




சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. சிறையில் அவருக்கு சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாகவும், சிறையிலிருந்து வெளியில் சென்று ஷாப்பிங் செய்ததாகவும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்ததுடன், அதற்காக சிறை உயர் அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி வரை சசி தரப்பில் லஞ்சம் தரப்பட்டதாகவும் சிறைத் துறை டிஐஜி ரூபா தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ரூபாவின் வாழ்க்கை கதையை படமாக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஏஎம்ஆர்.ரமேஷ். இவர் ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பான சைனைடு, சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வைத்து வனயுத்தம், சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு சம்பந்தமான ஒரு மெல்லிய கோடு ஆகிய படங்களை இயக்கியவர். சிக்கல் நிறைந்த நிஜ சம்பவங்களை படமாக்குவதில் திறமையானவர் ரமேஷ். அவர்தான் தற்போது ரூபா வாழ்க்கையையும் கையிலெடுத்திருக்கிறார். இதற்காக சசிகலாவுக்கு சிறையில் செய்து கொடுக்கப்பட்ட வசதிகள், அதிகாரிகள் பெற்ற லஞ்சம் குறித்து விவரங்கள் உள்பட பல்வேறு அதிரடி விஷயங்களை சேகரித்து வருகிறார்.

இதுகுறித்து இயக்குனர் ரமேஷ் கூறும்போது,’டிஐஜி ரூபாவின் வாழ்க்கை கதையை படமாக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான அனுமதியை சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து பெற்றேன். போலி முத்திரைத்தாள் விவகாரத்தில் கைதான அப்துல் கரீம் தெல்கி, சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தியதை அம்பலப்படுத்தியதுடன், போதை பொருட்கள் சிறையில் சகஜமாக புழங்குவதையும் ஏற்கனவே ரூபா அம்பலப்படுத்தியிருக்கிறார்.

சசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தியதால் பரபரப்பானார். இதுகுறித்து விவரங்களும், ஆதாரங்களும் சேகரித்து வருகிறேன். பிறகு ஸ்கிரிப்ட் எழுதுவேன். பவர்புல்லான ரூபா கதாபாத்திரத்தில் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்றார். ‘ரமேஷ் ஏற்கனவே நிஜ சம்பவங்களை படமாக்கிய அனுபவம் வாய்ந்த இயக்குனர். எனது வாழ்க்கையை படமாக்க கேட்டபோது சம்மதித்தேன். சமீபத்தில் என்னை சந்தித்த அவர் எனது சிறுவயது சம்பவங்கள், போலீஸ் அதிகாரி ஆக ஆசை வந்தது எப்படி? என்பது போன்ற விவரங்களை என்னிடம் கேட்டறிந்தார். இதெல்லாம் கதைக்கு தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்’ என்றார் ரூபா.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad