வடகொரியாவை தொடர்ந்து தென்கொரியாவும் ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரிப்பு
சியோல்: வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு பதிலடியாக தென்கொரியா ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. வடகொரியா தங்கள் நாடு மீது தாக்குதல் நடத்தும் பஞ்சத்தில் பதில் தாக்குதல் நடத்த தென்கொரியாவும் தயராகி வருகிறது. இதன் அடிப்படையிலேயே இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஏவுகணை பாய்ந்து சென்ற தூரம் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மையமான புங்கியேரிக்கு செல்லும் தூரத்திற்கு சமமானதாக இருந்தது. இதனை தென்கொரியா அரசின் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சோதனைக்கு ஹியுன்மூ, எப்-15கே ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.