Type Here to Get Search Results !

நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்







சென்னை: நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 18-க்குள் இணையதளத்தில் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை 2 வாரத்தில் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரிய வழக்கில் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்களின் தகவல்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களது பதவிக் காலத்தை நீட்டிக்க கூடாது எனவும் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர், நாராயணன் மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, தி.மு.க., தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் படி நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad