இடுப்பு கிள்ளு... ஹீரோயின் காண்டு!
ஷூட்டிங் ஸ்பாட்டில் நெருக்கமான காட்சியில் நடித்தபோது உணர்ச்சிவசப்பட்ட ரன்பீர் கபூர், தியா மிர்சாவின் இடுப்பை வலிக்குமளவுக்கு கிள்ளிவிட்டாராம். கடுப்பான தியா, ஸ்பாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
சன்னி லியோன், ஹரியானாவை சேர்ந்த ஒரு குழந்தையை தத்தெடுத்திருக்கிறார். சினிமாவின் நிழல்கூட படாமல் இந்தக் குழந்தையை வளர்க்கப் போகிறாராம்.
பாலிவுட்டிலும் வாய்ப்பில்லை. தாய்மொழி பெங்காலியும் கைவிட்டுவிட்டது. எனவே, கிளுகிளு வெப் சீரியல்களில் நடிக்கிறார் சித்ரங்கடாசிங்.
ஷ்ரத்தாகபூரோடு கிசுகிசு கிளம்பியதால் சாஹித்கபூர் கடுப்பாகி இருக்கிறார். மீடியாவை கண்டாலே தெறித்து ஓடுகிறார். இதனால் குடும்பத்திலும் கசமுசாவாம்.
படவாய்ப்புகளின்றி கடைதிறப்பு நிகழ்ச்சி களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. உடல் எடையை குறைக்க எடுத்த முயற்சிகள் படுதோல்வி அடைந்திருக்கின்றன