லூஸ்டாக் விட்டதால் தமன்னா தவிப்பு








பாகுபலி 2ம் பாகத்தில் தனக்கு நிறைவான கதாபாத்திரம் தரப்படவில்லை, இனி இந்தி படங்களில்தான் கவனம் செலுத்தப்போகிறேன் என்று தமன்னா கூறியதாக ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அவரது லூஸ்டாக் வேலை செய்ய ஆரம்பித்தது. தமிழில் படங்கள் ஒன்றிரண்டு வந்தாலும் தெலுங்கு படவுலகினர் அவரை டீலில் விட்டுவிட்டார்களாம். இந்தியை நம்பிச் சென்ற நிலையில் அங்கும் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இதென்னடா வம்பா போச்சேன்னு திகிலான தமன்னா, நான் அப்படியொரு பேட்டியே கொடுக்கவில்லை என்று அந்தர் பல்டியடித்தார். அது அவருக்கு மீண்டும் 2 படங்களை தெலுங்கில் பெற்றுத் தந்திருக்கிறது.

இந்நிலையில் ஜூனியர் என்டி ஆர் நடிக்கும், ‘ஜெய் லவ குசா’ படத்தில் குத்துபாடல் ஆட வாய்ப்பு வந்தது. பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் இவர்களிடம் முரண்டுபிடித்தால் மறுபடியும் டீலில் விட்டுவிடுவார்கள் என்று கணக்கு போட்டவர் குத்துபாடல் ஆட ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பளம் தாராளமாக தரவேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அதற்கு தயாரிப்பாளர்கள், ‘நீங்க வந்து ஒரு குத்து போட்டா போதும் கேட்ட சம்பளம் தருகிறோம்’ என்று பேசி முடித்துவிட்டார்கள். தற்போது தமன்னாவுக்கு சிக்கான கவர்ச்சி உடைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடக்கிறது. அடுத்த வாரம் ஐதராபாத்தில் படப் பிடிப்பு நடக்க உள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url