வில்லியாக நடிக்க வருகிறார் மந்த்ரா பேடி
நடிகை மந்த்ரா பேடியை ஞாபகமிருக்கிறதா? 2003ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது வர்ணனையாளராக வந்து கவர்ச்சி உடைகளில் கலக்கியவர். அதற்கு முன்பே இவர், ‘தில்வாலே துல்ஹனிய லே ஜாயேங்கே’, ‘பாதல்’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில், ‘மன்மதன்’ படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார். கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஒதுங்கியிருந்த மந்த்ரா, தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ‘சாஹோ’ படத்தில் நடிக்கிறார் மந்த்ராபேடி. அதுவும் வில்லியாக வேடம் ஏற்கிறார். இதுபற்றி மந்த்ராபேடி கூறும்போது,’இதுவொரு நெகடிவ் கதாபாத்திரம். ஆனாலும் பரவசத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். வித்தியாசமான கதாபாத்திரமாக இது எனக்கு அமைந்திருக்கிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. அதில் பங்கேற்று நடித்தேன்’ என்றார். சாஹோ படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக வேடமேற்றிருக்கிறார்.