ஒருநாள் தொடரிலும் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை
கொழும்பு: இலங்கை அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் முதன்முறையாக ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ‘ஒயிட்வாஷ்’ சாதனை படைத்தது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரிழும் 5-0 என வெற்றி பெற்று ‘ஒயிட்வாஷ்’ சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார். இது ஒரு நாள் அரங்கில் அவர் அடிக்கும் 30 வது சதமாகும். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்குடன் 2வது இடத்தை பகிர்ந்ததோடு சாதனையை சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் 49 சதங்களுடன் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டின் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 1000 ரன்களை கடந்து கோஹ்லி மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளார்.