எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார்: டி.டி.வி தினகரன் பேட்டி





சென்னை: எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார் என்று சென்னையில் பேசிய டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். ஆட்சியில் இருக்கும் பலர் சிறைக்கு செல்வது உறுதி, அந்த பயத்தில் தான் என்னை சிறைக்கு அனுப்ப நினைக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். என்னை சிறைக்கு அனுப்பினால் தப்பித்து விடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர் என்று கூறியுள்ளார். நான் அரசாங்க பணத்தை கையாடல் செய்தோ, ஊடல் செய்தோ, பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்தோ சிறைக்கு செல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார் என்று டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரித்தால் முதலில் திண்டுக்கல் சீனிவாசன்தான் சிறைக்கு செல்வார் என்று கூறியுள்ளார். பெரும்பாண்மை இல்லாததால் அனைவரும் பதவியை விட்டு செல்ல போகிறோம் என்ற பயத்தில் என் மீது குற்றம் சாட்டி வருகின்றனர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url