அரசியலுக்கு வந்த பின்பு ரஜினியுடன் பேசத் தயார்: நடிகர் கமலஹாசன்
சென்னை: அரசியல் கட்சி தொடங்கும் போது ரஜினி விரும்பினால் தனது கட்சியில் இணைத்து கொள்ள தயாராக இருப்பதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தற்போதய அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அவர், ரஜினியுடன் அரசியல் பேசத் தயார் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிவிட்டர் மூலம் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் கமலஹாசன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தாயார் என்று கூறியுள்ளார். மேலும் அரசியலுக்கு வந்த பின்பு ரஜினியுடன் பேசத் தயார் என்று கூறியுள்ளார். அறவழியில் போராடுவதே ஆரம்பம் என்றும், அகிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம் என்று கமல் தெரிவித்துள்ளார். நான் தொழிலுக்காக நடிக்கிறேன் என்று தெரிவித்த கமல், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.