இன்று மாலை வெளியாகிறது மெர்சல் டீசர்
தெறியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மெர்சல். டீசர் எப்போது வெளிவரும் என்று காத்திருந்த ரசிர்களுக்கு இன்று விருந்தாகிவிடும். படத்தின் அட்லீ பிறந்த நாளான இன்று மெர்சல் படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. மெர்சல் படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பு வெளிவரும் போதும், அப்படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டேயிருக்கிறது. மெர்சல் டைட்டிலுக்கு டிரேட் மார்க் சிம்பல் பெறப்பட்டது. பின்னர் முதல்முறையாக மெர்சல் எமோஜியும் வெளியிடப்பட்டது. சமீபத்தில் ‘மெர்சல்’ ஆடியோ வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தனர்.
மெர்சல் படத்தை ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். விஜய்யுடன், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், என 3 ஹீரோயின்கள் உள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் சினிமா உலகில் வந்து 25 வருடங்கள் நிறைவு செய்துள்ளார்.