Type Here to Get Search Results !

கொல்கத்தாவில் இன்று 2வது ஒருநாள் வெற்றியை தொடர இந்தியா உறுதி




கொல்கத்தா: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 2வது ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸி. அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) அபாரமாக வென்றது. ஒரு கட்டத்தில் 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய இந்தியா, ஹர்திக் - டோனியின் அபார ஆட்டத்தால் சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

குல்தீப், சாஹல், ஹர்திக் சிறப்பாகப் பந்துவீசி ஆஸி. பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இன்று நடக்கிறது. ரோகித், ரகானே சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சென்னையில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்த கேப்டன் கோஹ்லி, மணிஷ் பாண்டே கணிசமாக ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். டோனி, ஹர்திக் நல்ல பார்மில் உள்ளது நடுவரிசையை வலுவாக்கி உள்ளது. இந்திய அணி பந்துவீச்சும் வலுவாக உள்ளதால், ஆஸி. அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

தனது 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித், அணியை வெற்றிப்பாதைக்கு திருப்ப வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். வார்னர், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஹெட், வேட், பாக்னர் ஆகியோரும் பெரிய ஸ்கோர் அடிக்க முயற்சிப்பார்கள். வெற்றியை தொடர இந்தியாவும், பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும் வரிந்துகட்டுகின்றன. மழை குறுக்கீடு இல்லாதபட்சத்தில், இப்போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ். ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்ரைட், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஜேம்ஸ் பாக்னர், நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் ஏகார், ஆடம் ஸம்பா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், பிஞ்ச். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad