காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இந்தியாவுடன் உறவுகளில் முன்னேற்றம் இருக்காது பாகிஸ்தான் பிரதமர்







இந்தியத் தாக்குதலை எதிர்கொள்ள குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி தெரிவித்துள்ளார். 

நியூயார்க்கில் அவர் பேசும்போது, இந்திய ராணுவத்தினர் மறைமுக போர் உத்தியைக் கையாள்வதாகவும் அதை எதிர்கொள்ளும் வகையில் குறுகிய தூரம் பாய்ந்து தாக்கும் அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை கடந்த 50 ஆண்டுகளாகவே பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் இது குறித்து எந்த நாடும் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு தனது நாடு மறைமுக ஆதரவு  அளித்து வருகிறது என்பதை மறுத்தார்.காஷ்மீர் "முக்கிய பிரச்சினை" முதலில் தீர்க்கப்படாவிட்டால், இந்தியாவுடனான உறவுகளில் எந்த முன்னேற்றமும் இருக்காது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஆக்கிரமிப்பு தொடர்கிறதும் அது ஏற்கதக்கது அல்ல.  நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையில் இந்தியாவுடனான சாதாரண உறவுகளை விரும்புகிறோம்.பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நாங்களும்  ஒரு பங்காளியாகவே இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url