இப்படி கவர்ச்சி காட்ட வேண்டாம் : சமந்தாவுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை
நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இணையதளங்களில் வெளியிடுகின்றனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பும். நடிகை சமந்தா தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டுள்ளார். நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக செயல்படுவார்.
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் நீங்கள் நாகரீகமான உடையில் அழகாக தான் இருக்கிறீர்கள். இப்படி கவர்ச்சி காட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.