திரையரங்குகளில் இனி பாலியல் வன்முறைகள் விழிப்புணர்வு ஆவணப்படம்
இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தேசியகீதம் திரையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய கீதம் திரையிடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திரையரங்குகளில் விழிப்புணர்வு குறித்த ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. முதல்கட்டமாக டெல்லியில் தொடங்கப்பட்டு பின்னர் படிப்படியாக இந்தியா முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.