பிஜி தீவில் பார்ட்டியை முடித்த வெங்கட் பிரபு

சென்னை 28' 2-ம் பாகத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் பார்ட்டி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பிஜி தீவுகளில் நிறைவடைந்துள்ளது. 57 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது. இந்த படத்தில் ஜெய், சிவா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், ரெஜினா கெசன்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவு பெற்றதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்க, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். பார்ட்டி படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். கேங்ஸ்டராக பார்ட்டி படத்தில் ஷாம் நடிக்கிறார்.