தமிழில் அம்மா கேரக்டரில் அறிமுகமாகும் மலர் டீச்சர்
பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாய்பல்லவி. தெலுங்கிலும் பிடா என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். இந்நிலையில் தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. மணிரத்தினம் இயக்கத்தில் காற்றுவெளியிடை படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஸ்கெட்ச் படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அந்த படங்கள் எதுவும் கைகூடவில்லை. இந்நிலையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் கரு என்ற தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை என்று தெரிகிறது. சாய் பல்லவி அம்மாவாக நடிக்கிறார். இந்த படத்தில் கருக்கலைப்பு தொடர்பாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.