சாரண, சாரணியர் தலைவர் தேர்தல் மணி வெற்றி ; எச் ராஜா தோல்வி









சாரண, சாரணியர் இயக்க தலைவர், துணைத்தலைவர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இன்றுகாலை  தொடங்கியது.இதில் தலைவர் பத்விக்கு போட்டியிட்ட எச்.ராஜாவுக்கு ஏற்கனவே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

தேசிய தலைமை அலுவலக உத்தரவையும் மீறி சாரண, சாரணியர் இயக்க தேர்தல் நடைபெற்றுள்ளது என பாஜக தேசிய செயலர் எச் ராஜா குற்றம்சாட்டினார்.

சாரண,சாரணியர் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது திடீர் திருப்பமாக தேர்தல் பார்வையாளர் சங்கரன் வெளிநடப்பு செய்தார் இதனால் வாக்கு எண்ணும் பணியில்  பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் ஒருவராக வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கபட்டது.

சாரண, சாரணியர் இயக்க தலைவர், தேர்தலில்  மணி 234 வாக்குகள் பெற்று கல்வித்துறை முன்னாள் இயக்குனர் வெற்றி பெற்றார். எச்.ராஜா  46 வாக்குகளே பெற்று தோல்வி அடைந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url