பெண் வக்கீல் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 70 வயது சாமியார்





சத்தீஸ்கர்  மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் பிரபனசார்யா பலஹரி மகாராஜ் என்ற சாமியார். இவர்  தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயது மிக்க இளம்பெண் போலீஸ் நிலையத்தில் ஒருவர்   புகார் அளித்துள்ளார். ஆல்வார் பகுதியில் உள்ள ஆசிரமத்தில் சாமியார் மகாராஜ் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக இளம்பெண் தனது புகாரில் கூறி உள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அரவலி காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், புகார் தொடர்பாக விசாரிப்பதற்காக போலீசார் ஆசிரமம் சென்றபோது சாமியார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. மருத்துவர்களின் அனுமதியுடன் சாமியாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், “சட்ட படிப்பை முடித்த அந்த இளம்பெண் இண்டன்ஷிப் செய்து வந்தார். சாமியார் மகாராஜ் பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி நன்கொடை கொடுப்பதற்காக சாமியாரின் ஆசிரமத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது சாமியார் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம்” என்று தெரிய வந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url